Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 06 , மு.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
உள்ளூராட்சித் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் பருத்தித்துறை நகரசபைக்கு போட்டியிடுகின்ற மக்கள் விடுதலை முன்னணியின் பெண் வேட்பாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அவரின் பருத்தித்துறையிலுள்ள வீட்டுக்கு சென்ற குண்டர்கள் குழு, தேர்தலிலிருந்து இவர் விலக வேண்டுமென்று கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் நேற்று சனிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் பருத்தித்துறை நகரசபைக்கு போட்டியிடுகின்ற மக்கள் விடுதலை முன்னணியின் இளம் பெண் வேட்பாளரான தவராசா புஷ்பராணி என்பவருக்கே கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதென்று முறைப்பாடு கிடைத்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தெடர்பான விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக பருத்தித்துறை பொலிஸார் மேலும் கூறினர்.
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago