Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 06 , மு.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
பாடாசாலை மாணவியொருவரை (வயது 15) பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபரை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிபதி திருமதி ஸ்ரீநிதி சந்திரசேகர் உத்தரவிட்டார்.
வடமராட்சி கிழக்கு, கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த பாடாசாலை மாணவியொருவரை வல்லுறவுக்குட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் நெல்லியடி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட 40 வயதான சந்தேக நபர், பருத்தித்துறை நீதவான் நீதிபதி திருமதி ஸ்ரீநிதி சந்திரசேகர் வீட்டில்;; நேற்று சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே, சந்தேக நபரை 14 நாள்கள் விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பாடசாலை விட்டு வீடு திரும்பிய குறித்த மாணவியை, மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர் கடத்திச் சென்று பளையிலுள்ள பாழடைந்த வீட்டில் வைத்து பாலியல் குற்றம் புரிந்ததாக நெல்லியடி பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
குறித்த மாணவி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
Atham Bawa Ameen Monday, 07 February 2011 03:50 PM
இவன் மனிதன் அல்ல. ஒரு மிருகம் .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago