2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

ஆள் நடமாட்டமற்ற பகுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 09 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். கொக்குவில் தலையாளி கிழக்குப் பகுதியில் ஆள் நடமாட்டமற்ற பகுதியிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

கொக்குவில் பகுதியைச்; சேர்ந்த பா.சிவசங்கர் (வயது 36) என்பவரது சடலமென உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர் கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயிருந்தாரெனத் தெரிவிக்கப்படுகிறது. யாழ். பொலிஸார் முன்னிலையில் மீட்கப்பட்ட இச்சடலம் யாழ். போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம்  மருத்துவப் பரிசோதனை இடம்பெறவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X