A.P.Mathan / 2011 பெப்ரவரி 09 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
கௌதம புத்தர் பிறந்து இவ்வருடத்துடன் 2,600 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட அரச மரத்தின் கிளையொன்று புத்தரின் பிறப்பிடமான இந்தியாவின் புத்தகாயா பிரதேசத்தில் நடுவதற்காக கொண்டுசெல்லப்படவுள்ளது.
சுமார் 2,364 ஆண்டுகளுக்கு முன்னர் சங்கமித்த தேரரினால் ஜம்புகோளப்பட்டிணத்தில் நடுவதற்காக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட அரச மரக்கிளையொன்று பின்னர் அநுராதபுரம் ஸ்ரீமகா போதியில் நடப்பட்டது.
இந்நிலையில் ஸ்ரீமகாபோதியில் மிகப் பழமைவாய்ந்த நிலையில் காணப்பட்ட இந்த மரத்தின் கிளையொன்று இம்மாதம் 16ஆம் திகதி இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு 17ஆம் திகதி அங்கு நடப்படவுள்ளது.
இவ்வாறு இந்தியாவுக்கு கொண்டுசெல்வதற்கு தயார்ப்படுத்தப்படவுள்ள அரசமரக்கிளை, இன்று யாழ்ப்பாணத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு அதனை மத அனுஷ்டானங்களுக்கு உட்படுத்தப்படுவதை படங்களில் காணலாம். இந்த ஏற்பாடுகளை யாழ்மாவட்ட பாதுகாப்பு படையினர் மேற்கொண்டிருந்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago