2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வடக்கிலிருந்து தெற்கு நோக்கி மிகப்பிரமாண்டமான சைக்கிள் சுற்றுலாப் பவனி

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 13 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

அகில இலங்கை சாரணர் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட மிகப்பிரமாண்டமான சைக்கிள் சுற்றுலாப்பவனி ஒன்று வடக்கிலிருந்து தெற்கு நோக்கி இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஆரம்பமாகியுள்ளதாக அகில இலங்கை சாரணர் சங்கம் அறிவித்துள்ளது.

வடபகுதி பருத்திமுனையிலிருந்து ஆரம்பித்து 8 நாட்கள் பயணிக்கும் இச்சைக்கிள் சுற்றுலா தெற்கில் காலி தேவேந்திரமுனையை சென்றடையும் என ஏற்பாட்டாளர்கள்  தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் அனைத்து மாவட்டங்களின் சாரணர்கள், திரிசாரணர்கள் உட்பட 100 பேரின் பங்களிப்புடன் இச்சைக்கிள் சுற்றுலா 662 கிலோ மீற்றருக்குப் பயணிக்கவுள்ளது.

இலங்கை சாரணர் சங்கத்தின் ஒருங்கமைப்பு ஆணையாளர் பிரபால் குலரத்ன தலைமையில் இந்தச் சைக்கிள் சுற்றுலா இடம்பெறுகின்றது. ஒவ்வொரு சாரணர் மாவட்டத்திலிருந்து ஐந்து சிரேஷ்ட சாரணர்கள் அல்லது திரிசாரணர்கள் வீதம் இந்தச் சுற்றுலாவில் கலந்து கொண்டுள்ளனர்.

பருத்தித்துறையிலிருந்து இன்று ஞயிற்றுக்கிழமை புறப்பட்ட இச்சைக்கிள் சுற்றுலா- யாழ்ப்பாணம் சென்று அங்கிருந்து நாளை புறப்பட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் தங்கி, நாளை மறுதினம் அங்கிருந்து புறப்பட்டு மாங்குளம் ஊடாக வவுனியாவுக்கு செல்லவுள்ளது.

வவுனியாவில் இருந்து எதிர்வரும் 16ஆம் திகதி அனுராதபுரம் சென்று, அங்கிருந்து 17ஆம் திகதி தம்புள்ள, அளுவிகார ஊடாக 18ஆம் திகதி கண்டிக்கு இச் சைக்கிள் சுற்றுலா செல்லும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், கண்டியில் இருந்து கேகாலை சென்று 19ஆம் திகதி நிட்டம்பு ஊடாக  களனி, கொழும்பு, மொரட்டுவ, பாணந்துறை, களுத்துறையை அடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, 20ஆம் திகதி பேருவளையில் ஆரம்பமாகி காலியை அடைந்து, இங்கிருந்து 21ஆம் திகதி புறப்பட்டு வெலிகம, மாத்தறை சென்று அங்கிருந்து 22ஆம் திகதி தேவேந்திர முனையைச் சென்றடைவதுடன் இச்சாரணர் சைக்கிள் சுற்றுலா நிறைவடையவுள்ளது என மேலும் ஏற்பாட்டாளர்கள்  தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X