Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 14 , மு.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்பில் கடற்றொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் இன்று திங்கட்கிழமை முதல் இராணுவப் பதிவை மேற்கொண்ட பின்னரே கடற்றொழிலில் ஈடுபட முடியுமென படையினர் அறிவித்துள்ளனர்.
கடற்றொழிலுக்கு செல்லும் மீனவர்கள் படை முகாம்களில் தங்களைப் பதிவு செய்து கடலுக்குள் இறங்கும் நடைமுறை யாழ். குடாநாடு பூராகவும் முன்னர் இருந்தபோதிலும், யுத்தம் நிறைவடைந்த பின்னர் இந்த நடைமுறை தளர்த்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், மீண்டும் இந்நடைமுறையை கடைப்பிடிக்குமாறு வடமராட்சி வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு படைத் தரப்பினரால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக வடமராட்சி கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago