2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதி அகலமாக்கும் பணி

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 14 , மு.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதி அகலமாக்கும்  பணிகள் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை  வீதி அகலமாக்கும் பணிகள் யாழ்ப்பாணத்திலிருந்து முதலில் ஆரம்பிக்கப்படுமென்று  எதிர்பார்க்கப்பட்டபோதிலும், தற்போது இப்பணி காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள இணுவில் தென்னிந்திய திருச்சபைக்குச் சொந்தமான வைத்தியசாலை முன்றலிலிருந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. இணுவிலிலிருந்து மருதனார்மடம் சந்தி வரையான பகுதியில் தற்போது இப்பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக இப்பகுதியில் கிழக்குப் புறமாகவுள்ள பகுதி வீதியின் நடுப் பகுதியிலிருந்து 7 மீற்றர் தூரத்திற்கு உட்பட்ட பகுதியில் அதிகளவான கட்டடங்கள் மற்றும் வீடுகள் இல்லாதுள்ளது. இப்பகுதியில் ஏற்கனவே அதிகளவான பகுதி வீதிக்கு விடப்பட்ட நிலையில் வீதி அகலமாக்கும் பணிகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபை முன்னெடுத்துள்ளது.

இதேவேளை, இணுவில் வைத்தியசாலையின் முன் மதில் பகுதி உடைக்கப்பட்டு புதிய மதில் கட்டிக்கொடுக்கும் பணியிலும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X