2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பலாலி ஆசிரியர் கலாசாலை மீண்டும் சொந்த இடத்தில் இயங்கவுள்ளது

Super User   / 2011 பெப்ரவரி 14 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையை மீண்டும் பலாலியில் உள்ள சொந்தக் கட்டிடத்துக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக பலாலி ஆசிரியர் கலாசாலை நிர்வாகம் இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

கடந்தகால யுத்ததின் காரணமாக நெருக்கடியான சூழ்நிலையில் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் கடந்த 25 வருடங்களாக குறித்த ஆசிரியர் கலசாலை திருநெல்வேலி முத்துத்தம்பி மகா வித்தியாலய கட்டடத்தில் இயங்கி வந்தது.

இதன் காரணமாக பல இடங்களிலும் இயங்கி வந்த கலாசாலை கல்வியலாளர்களும் சமூக நலன்விரும்பிகளும்  எடுத்த கடும் நடவடிக்கையின் காரணமாக மீண்டும் சொந்த இடத்தில் இயங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X