2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கொடிகாமத்தில் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் மரணம்

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 15 , பி.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். கொடிகாமம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதாக நேற்று செவ்வாய்கிமை கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த வைத்தியலிங்கம் அமிர்தலிங்கம் (வயது 55) என உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.  

நேற்று செவ்வாய்க்கிழமை அவரது வீட்டுக்கருகிலுள்ள வளவின் கிடங்கினுள் சடலமொன்றினைக் கண்டுள்ளனர். உடனடியாக கிராம சேவையாளருக்கும் கொடிகாமம் பொலிஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தினை மீட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X