2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாழ் மீனவர்கள் அறுவர் மாயம்

Super User   / 2011 பெப்ரவரி 18 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

 யாழ். வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியிலிருந்து 3 படகுகளில் கடற்றொழிலுக்கெனப் புறப்பட்டுச் சென்ற ஆறு பேர்  இதுவரை கரை திரும்பாததனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
  அம்மீனவர்கள் ஆதிகோவிலடியிலிருந்து மூன்று படகுகளில் இன்று அதிகாலை  புறப்பட்டுச் சென்றதாக  அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
இன்று மாலை முதல் அவர்களைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள போதிலும் இது வரை அவர்கள் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என வல்வெட்டித்துறை கடற்றொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.சதீஷ்குமார் தெரிவிகத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X