A.P.Mathan / 2011 பெப்ரவரி 18 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
யாழ். குருநகரைச் சேரந்த மீனவர்கள் நால்வர் இன்று அதிகாலை இந்திய மீனவர்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டு மண்டபம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் சங்கங்களில் சமாசத் தலைவர் எஸ்.தவரட்ணம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்...
'குருநகரைச் சேர்ந்த பிரான்ஸிஸ் (வயது 60), பாஸீஸியஸ் (49), ராஜலிங்கம் (59), அருள்ராஜ் (33) ஆகிய நான்கு மீனவர்களும் இன்று அதிகாலை மீன்பிடி தொழிலுக்கு சென்றிருந்தனர். இவர்களின் படகு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால் இந்திய எல்லைக்கு நுழைந்தபோது அங்கு மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் இந்நால்வரையும் மக்கிப் பிடித்து கரையோர காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்கள் நால்வரும் தற்சமயம் மண்டபம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு மீனவ சங்கத்தின் தலைவர் எனக்கு அறிவித்துள்ளார். இவர்களை விடுவிப்பது தொடர்பான நடவடிக்கைகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன' என்று தெரிவித்தார்.
இலங்கை மீனவர்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மீனவர்கள் இன்று நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கைதானது மேலும் விரிசலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதென மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
7 minute ago
10 minute ago
12 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
12 minute ago
21 minute ago