Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 28 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கிரிசன்)
வலிவடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவு மீள்குடியேற்றத்திற்;கு அனுமதிக்கப்பட்டு மக்கள் குடியேறத் தொடங்கிய நிலையிலும் கூட, இப்பகுதிக்கான கமத்தொழில் திணைக்களம் இயங்காது வேறிடத்தில் இயங்கும் நிலைமை தொடர்ந்து காணப்படுகிறது.
கமத்தொழில் திணைக்களம் வலிவடக்குப் பகுதியில் இயங்குவதற்கான காரணங்கள் காட்டியபோதிலும், அது தனது பகுதி மீளக்குடியேற அனுமதிக்கப்படவில்லையெனக் கூறி சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கி வருகிறது. இதனால், மீளக்குடியேறிய மக்கள் உரிய விவசாய உள்ளீடுகளைப் பெறுவதில் சிரமங்களுக்கும் உள்ளாகுகின்றனர்.
மீள்குடியேறும் மக்கள் பலத்த நெருக்கடிகள் வசதியீனங்களுக்கு மத்தியிலேயே தமது மீள்குடியேறி வருகின்றனர். இம்மக்களுடைய மீள்குடியேற்றத்தை ஊக்குவிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசாங்க ஊழியர்களுக்கும் பொது அமைப்புக்களுக்கும் உண்டு.
இந்நிலையில், வலிவடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அனைத்து திணைக்களங்கள் மற்றும் அதிகாரசபைகளும் தெல்லிப்பளையில் இயங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
7 minute ago
10 minute ago
12 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
12 minute ago
21 minute ago