2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பிள்ளைகளால் கைவிடப்பட்ட தாய்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 10 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வயோதிப தாயொருவர் தனித்து விடப்பட்ட நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக வீதியோரத்தில் அநாதரவாக வாழ்க்கை நடத்தி வரும்  துன்பகரமான நிகழ்வொன்றை யாழ். இராசாவின் தோட்ட வீதியில் காணக் கூடியதாகவுள்ளது.

குறித்த தாய் தனது பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் தனிமையாக வாழ்க்கை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக இத்தாய் யாழ். இராசாவின் தோட்ட வீதியோரத்தை தனது வதிவிடமாகக் கொண்டு  அங்கேயே ஓரிரு சமையல் பாத்திரங்களை வைத்து உணவு சமைத்து அதிலேயே தூங்கி எழும்பி தனது வாழ்நாள்களை கழித்து வருகிறார்.  

தனது நாளாந்த வாழ்க்கையை கழிப்பதற்கே  அல்லப்படும் இத்தாய்  கடந்த 3 தினங்களாக உட்கொள்வதற்கு உணவின்றி தவித்து வருகிறார். இந்நிலையில் தண்ணீரை மாத்திரமே அவர் பருகி வருகிறார்.

பிச்சை எடுத்து வாழ்வதற்கு  மறுப்புத் தெரிவித்துள்ள இத்தாய் கௌரவமற்ற தொழிலை தான் செய்ய விரும்பவில்லையெனவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X