Super User / 2011 மார்ச் 11 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(றிப்தி அலி)
யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு அரசாங்கத்தினால் எந்தவித அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்து மீள்குடியேறிய முஸ்லிம்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மேற்கொண்ட சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலை முடிவுக்கு வந்தது.
யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திருமதி ரதி தேவேந்திரன், உண்ணாவிரதம் இடம்பெற்ற பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு வழங்கிய உறுதிமொழியையடுத்தே குறித்த உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட உணவு விநியோக முத்திரை நிறுத்தப்பட்டமை, கொடுப்பனவுகள் வழங்கப்படாமை, அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் நேரில் வந்து பார்வையிடாமை மற்றும் யாழ். பொம்மைவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள மதுபானசாலை மூட வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சுழற்சி முறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மேற்படி மக்களை, அரச உயர் அதிகாரிகள் யாரும் பார்வையிடாமையால் நேற்று வியாழக்கிழமை முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர்.
கடந்த வருட நடுப்பகுதி முதல் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் மீளக்குடியேற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
2 hours ago
goodheart Saturday, 12 March 2011 03:29 PM
நாட்டின் பொதுவாக நம்முடைய மக்கள் பிரதிநிதிகளை நம்பி ஒரேயடியாக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்துவிட வேண்டாம். கண்ணீர் அஞ்சலிக்குத்தன் இவர்கள் வருவார்கள்.கோரிக்கையை நிறைவேற்றுவதற்கல்ல.
Reply : 0 0
xlntgson Sunday, 13 March 2011 09:11 PM
good heart, நல்லிதயமா பேசுகிறது? மரணத்தைப் பற்றி நான் நினைக்கவில்லை இது ஒரு கவன ஈர்ப்பு பிரேரணை என்றேன்! பாராளுமன்றம் நடக்கிற காலங்களில் வேறு அலுவல்களை விட்டு விட்டு உடன் கவனிக்க வேண்டும் என்றும் கோரும் உடனடிப் பிரச்சினைகள் உண்டு, ஆனால் பாராளுமன்றம் நடக்காத காலங்களில் எவ்வாறு கவன ஈர்ப்பு செய்ய இயலும், பகுதி எம்பி கவனம் இல்லை என்றால் இதை எம்பியின் கவனத்துக்கு ஈர்ப்பு பிரேரணை என்று கூறலாமோ? கண்துடைப்பு ஒரு நாள், கேதம் ஆகலாம் அல்லவா? அவரவர் பிரச்சினை அவரவருக்கு தூர இருந்து பார்க்கிறவர்களுக்கு இலகு.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago