Kogilavani / 2011 மார்ச் 22 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கர்ணன், கவிசுகி)
யாழ் வடமராட்சி மீனவர்கள் மூவரை இந்தியக் மீனவர்கள் சிறைப்பிடித்துள்ளதாக வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி கடல்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை மீன்பிடிப்பதற்காகச் சென்ற வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி கடல்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தைச் சேர்ந்த நடராஜ சுந்தரம் செந்தூரன் (வயது 24), பரமராஜ சுந்தரன் கேசவ ரூபன் (வயது 21), பத்மநாதன் பத்ம ராஜ் (வயது 22) ஆகியோரே இவ்வாறு இந்திய மீனவர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாலை 5 மணிக்கு மீன்பிடிக்க சென்ற இவர்கள் மாலை வரை வீடு திரும்பாமையால் இவர்கள் குறித்து தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர், இந்தியாவிலிருந்து இந்திய மீனவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாம் அவர்களை சிறைப்பிடித்து வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளதுடன், சிறைப் பிடிக்கப்பட்ட ஒருவரை உறவினர்களுடன் பேச வைத்துள்ளனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago