Suganthini Ratnam / 2011 மார்ச் 30 , மு.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தராக நியமனம் பெற்ற மருத்துவபீட பேராசிரியரான திருமதி. வசந்தி அரசரட்னம் இன்று புதன்கிழமை யாழ். பல்கலைக்கழகத்தில் வைத்து தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார்.
யாழ். பல்கலைக்கழக வரலாற்றில் பெண்ணொருவர் துணைவேந்தராக நியமனம் பெற்றமை இதுவே முதல்த் தடவையாகும்.
இவருக்கான துணைவேந்தர் நியமனம் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டிருந்தது.
யாழ். பல்கலைக்கழகத்தில் புதிய துணைவேந்தரை தெரிவுசெய்வதற்கான தேர்தல் கடந்த வருடம் நவம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெற்றது. பேரவை உறுப்பினர்களின் தெரிவின்படி பேராசிரியர் வசந்தி அரசரட்னம் 14 வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
இதன்படி, ஜனாதிபதி செயலகத்தினால் யாழ். பல்கலைக்கழகப் பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் இவர் துணைவேந்தராக தெரிவு செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
7 minute ago
10 minute ago
12 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
12 minute ago
21 minute ago