Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 11 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அதிபர் நோபெல் விமலேந்திரன் வெற்றிக் கிண்ணத்திற்காக அகில இலங்கைப் பாடசாலை அணிகளுக்கு இடையே வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் விளையாட்டு அபிவிருத்திக் குழுவினர் நடத்திய இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரின் மூன்றாம் இடத்திற்கான போட்டி மற்றும் இறுதிப் போட்டிகள் நாளைமறுதினம் புதன்கிழமை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளன.
காலை 10.00 மணிக்கு நடைபெறும் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரியும் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியும் மோதவுள்ளன.
பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் யாழ்ப்பாண சென் பற்றிக்ஸ் கல்லூரியும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியும் மோதவுள்ளன.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago