2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

யாழில் மிதிவெடி விழிப்புணர்வு கண்காட்சி

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 17 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

மிதிவெடி செயற்பாட்டு விழிப்புணர்வுக்கு 'உதவிக்குமான சர்வதேச தினத்தை' முன்னிட்டு கண்காட்சி மற்றும் கலை நிகழ்வுகள் யாழ். இந்துக் கல்லூரியில் நடைபெறவுள்ளன.

எதிர்வரும் 20ஆம் 21ஆம் திகதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இக்கண்காட்சி மற்றும் கலை நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

வடபிராந்திய மிதிவெடி செயற்பாட்டு அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள மேற்படி நிகழ்வுகளில் இராணுவ பொறியியல் படைப்பிரிவு, ஹலோரஸ்ட், டெனிஸ் மிதிவெடி அகற்றும் நிறுவனங்களின் கண்ணிவெடி அகற்றலுக்கான செயன்முறை விளக்கங்கள் வழங்கப்படவுள்ளன. அத்துடன், கண்ணிவெடி அகற்றலுக்கு பயன்படுத்தப்படும் இயந்திரப் பொறிகளின் காட்சிப்படுத்தலும் நடைபெறவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .