2025 மே 22, வியாழக்கிழமை

யாழ். போதனா வைத்தியசாலைக்கு பின்வாசல் வழியாக அனுமதி; பொதுமக்கள் சிரமம்

Suganthini Ratnam   / 2011 மே 18 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். போதனா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்களைப் பார்வையிடுவதற்காக வரும் பொதுமக்கள் வைத்தியசாலையின் பின்வாசல் வழியாக வருவதால்; பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

நோயாளரைப் பார்வையிட வரும் பொதுமக்கள் கொளுத்தும் வெயிலிலும் மழையிலும் ஒதுங்குவதற்கும் தங்கிநின்று இளைப்பாறுவதற்கும் ஒரு இடம் கூட இல்லை. மணிக்கணக்கில் வரிசையில் நின்று தமது உறவினர்களைப் பார்த்துவிட்டுச் செல்கின்றனர். இதனால் நோயாளர்களைப் பார்வையிட வருவோர் தற்காலிக கூடாரம் அமைத்துத் தருமாறு யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நோயாளர்களைப் பார்வையிட வரும் உறவினர்கள் அதிக நேரம் வெயிலில் நிற்பதால்; சிலர் மயங்கி விழுவதாகவும் சிலர் வாந்தி எடுப்பதாகவும் பொதுமக்கள் தரப்பினரால் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது தனியார் தொண்டு நிறுவனங்கள் முன்வந்து நோயாளரைப் பார்வையிட வருபவர்களுக்கு தற்காலிகக் கூடாரத்தை அமைத்துக் கொடுக்கலாம் எனவும் அரசாங்கம் இதை செய்யமுடியாது எனவும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X