Suganthini Ratnam / 2011 மே 20 , மு.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். வடமராட்சி கிழக்குப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இந்த மாத இறுதிக்குள் மீள்குடியேறுவதற்கான அனுமதி பாதுகாப்பு அமைச்சிடமிருந்து கிடைத்துள்ளதாக யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
வடமராட்சி கிழக்கில் இதுவரை மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்படாதிருந்த பகுதிகளில் இந்;த மீள்குடியேற்றம் நடைபெறவுள்ளது. இந்த மாத இறுதிக்குள் மீள்குடியேற்றம் நடைபெறுமெனவும்; அவர் கூறினார்.
இதேவேளை, கீரிமலை வலித்தூண்டல் கடலில் மீன்பிடியில் ஈடுபட அனுமதி வழங்குமாறு அப்பகுதி மீனவர்கள் தம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் கடற்படையினருடன் ஆராயப்படவுள்ளதாகவும் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.
43 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago