Suganthini Ratnam / 2011 மே 22 , மு.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி, ரி.விவேகராசா)
பல்கலைக்கழங்களில் கல்வியைத் தொடர்வதற்கு தகுதி பெற்ற மாணவர்கள் இராணுவ முகாம்களில் வழங்கப்படவுள்ள தலைமைத்துவ பயிற்சிக்காக வடமாகாணத்திலிருந்து தெரிவானவர்கள் நேற்று கண்டி நோக்கி பயணமாகியுள்ளனர்
நாளை திங்கட்கிழமை கண்டி, ரன்தம்பே ஆகிய இராணுவ முகாம்களில் இவர்களுக்கு இராணுவ தலைமைத்துவ பயிற்சிகள் வழங்குவதற்கு உயர் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களிலிருந்து தெரிவான மாணவர்கள் நேற்று சனிக்கிழமை பயணமாகியுள்ளனர். இந்த நிலையில் யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் தத்தமது போக்குவரத்து செலவிலேயே பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
யாழ். பஸ் நிலையத்;திலிருந்து ஒரு தொகுதி மாணவர்களும் யாழ். இந்துக் கல்லூரி மைதானத்திலிருந்து மற்றுமொரு தொகுதி மாணவர்களுமாக இரு பஸ்களில் மாணவர்கள் பயணமாகியுள்ளனர்.
38 minute ago
56 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
56 minute ago
1 hours ago
2 hours ago