Kogilavani / 2011 மே 24 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வன்னியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள பல பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் கடமைக்கு திரும்பாததால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதாக மாணவர்களின் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட கொக்குளாய் பகுதியில் இயங்கும் பாடசாலையில் 60 மாணவர்களுக்கு மேல் கல்வி கற்று வருகின்றனர். ஆனால் தற்போது 4 ஆசிரியர்கள் மட்டுமே கடமைக்கு திரும்பியுள்ளனர்.
இந்த பாடசாலையில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கில பாடங்களுக்கு ஆசிரியர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை என்றும் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட கணித, விஞ்ஞான, ஆங்கில ஆசிரியர்கள் இப்பகுதியில் வசதிகள் இல்லை எனக் கூறி வேறு இடங்களுக்கு தற்காலிக இடமாற்றம் பெற்று சென்று விட்டதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
12 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago