Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Super User / 2011 மே 28 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
வட மாகாணத்திற்காக யாழ். தேவி ரயில் அடுத்த இரண்டு வருடங்களுக்குள் காங்கேசன்துறையை சென்றடையும் என போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டம் இந்திய அரசின் கடனுதவியுடன் நடைபெறவுள்ளதாக அவர் கூறினார்.
சிங்கர் நிறுவன அனுசரணையில் அமைக்கப்பட்ட ஓமந்தை புகையிரத நிலைய திறப்பு விழா நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டிலுள்ள புகையிரத பாதைகள் அனைத்தையும் புனர்நிர்மாணம் செய்யவேண்டியுள்ளது. இதன் மூலம் புகையிர பாதைகளின் வேகத்தை அதிகரித்து குறைந்த நேரத்திற்குள் பயணத்தை நிறைவுசெய்ய முடியும் என அவர் குறிப்பிட்டார்.
புகையிர சேவையை விணைத்திறனுள்ளதாக மாற்றுவதற்கு புகையிரத திணைக்கள ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைத்து பாடுபட வேண்டும் என அவர் கூறினார்.
கம்பனித்துறை சமூக பொறுப்புடமை திட்டத்தின் கீழ் சிங்கர் நிறுவனத்தை போன்று ஏனைய தனியார் நிறுவனங்களும் நாட்டில் அபிவிருத்தியை மேற்கொள்ள அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பட்டார்.
ஓமந்தை புகையிரத நிலையம் மற்றும் தாண்டிக்குளம் முதல் ஓமந்தை வரையான புகையிர பாதை புனர்நிர்மானம் ஆகியவற்றிக்காக சிங்கர் நிறுவனம் 10 மில்லியன் ரூபா நிதியுதவியளித்திருந்தமை குறிப்பிட்டத்தக்கது.
தாண்டிக்குளம் வரை இடம்பெற்று வந்த வட மாகாணத்திற்கான யாழ் தேவி ரயில் சேவை நேற்று வெள்ளிக்கிழமை ஓமந்தை வரை உத்தியோகபூர்வமாக நீடிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம, போக்குவரத்து பிரதியமைச்சர் ரோகன திஸாநாயக்க, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம்.எஸ்.சாள்ஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago