2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'சமயக் குருமாரின் விசா நெருக்கடிகள் குறித்து கவனம் செலுத்தப்படும்'

Suganthini Ratnam   / 2011 மே 29 , மு.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

சமயக் குருமார்கள் சமயக் கல்விகளை தொடரும் முகமாக இந்தியாவிற்கு செல்வதில் ஏற்படும் விசா நெருக்கடிகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படுமென யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத் தூதுவர் வி.மகாலிங்கம் தெரிவித்தார்.

அகில இலங்கை இந்துமாமன்ற சிவத்தொண்டர் மாநாட்டில் நேற்று சனிக்கிழமை உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

திருக்கோவில் புனரமைப்பு வேலைகளை துரிதமாக மேற்கொள்ளுவதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான வேலைகள் வெகு விரைவில் ஆரம்பமாகவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்துக் குருமார் தமது சமயக் கல்விகளைப் பயிலுவதற்காக இந்தியா செல்வதற்கான விசா அனுமதியின்போது பல நெருக்கடிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை  இந்திய உள்துறை பிரிவினருக்கும் மற்றும் உரிய உயர் அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தி இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டில் யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத் தூதுவர் வி.மகாலிங்கம் இந்து மாமன்றத்தினால் கௌரவிக்கப்பட்ட அதேவேளை,  இந்து ஆராய்ச்சி நிலைய கௌரவ இயக்குனராக தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவரும் இந்து மாமன்றத்தின் உபதலைவருமான செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் நியமனம் செய்யப்பட்டார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X