2025 மே 21, புதன்கிழமை

புத்தளத்தில் வீட்டுத்திட்டம் பெற்ற முஸ்லிம்களுக்கு யாழில் வீடுகள் இல்லை: அரச அதிபர்

Suganthini Ratnam   / 2011 மே 29 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் புத்தளத்தில் தங்கியிருந்த முஸ்லிம்கள் அங்கு அரசாங்கத்தின் அல்லது அரசசார்பற்ற நிறுவனங்களின் வீட்டுத்திட்ட உதவிகளைப் பெற்றிருந்தால் அவர்களுக்கு மீண்டும் யாழ்ப்பாணத்தில் வீட்டுத்திட்ட உதவிகள் வழங்கப்படமாட்டாதென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார். 

புத்தளத்தில் வீட்டுத்திட்ட உதவிகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் யாழ்ப்பாணத்தில் மீள்குடியமர்ந்திருந்தால் அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் வீட்டுத் உதவிகள் வழங்கப்படுமெனவும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிய முஸ்லிம்கள் தங்களுக்கு எந்தவிதமான வீட்டுத்திட்ட உதவிகள் வழங்கப்படவில்லையென்பதுடன், அது பிரதேச செயலகத்தால் தடுத்து நிறுத்தப்படுவதாகவும்   முறையிட்டிருந்தனர்.  இந்த நிலையிலேயே யாழ். அரசாங்க அதிபர் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0

  • mam.fowz Sunday, 29 May 2011 06:24 PM

    அப்படி என்றல் அவர்கள் யாழ்ப்பாணத்தில் விட்டு சென்ற சொத்துகளையும் உடமையும் பார்த்தால் இந்த அரசாங்கம் என்னதான் செய்வார்கள் ?
    எமது மக்கள் பழசை மறந்து பழைய உறவுகளை தாகத்துடன் அரவணைக்கும் தருவாயில் யாழ்.அதிபர் கூறுவது அவரின் தனி கருத்து என்றுதான் முடிவாகும் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .