2025 மே 21, புதன்கிழமை

சிங்கள மொழி வகுப்புகளில் இடம் கிடைக்காததால் அரச ஊழியர்கள் ஏமாற்றம்

Suganthini Ratnam   / 2011 மே 29 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

வடமாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிறுவனம் யாழ். மாவட்ட அரச ஊழியர்களுக்காக  நடத்தும் சிங்கள மொழி பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்வதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் சமூகமளித்தபோதிலும், ஒரு நிலையத்தில் நாற்பது பேர் மட்டுமே இணைத்துக்கொள்ளப்படுவர்கள் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தமையால் பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை 28ஆம் திகதி  வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளதால் இதில் கலந்து கொள்ளுமாறு அரச ஊழியர்களை வடமாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிறுவனம் சுற்றுநிரூபம் மூலம் அறிவுறுத்தியிருந்தது.

இதனால் நேற்று நான்கு இடங்களில் இடம்பெற்ற வகுப்புகளுக்கு  பல்வேறு தரங்களிலும் கடமையாற்றும் நூற்றுக்கணக்கான அரச அலுவர்கள் சென்றிருந்தனர்.

ஆனால் ஏற்பாட்டாளாகள் கலந்துகொண்டவர்களை எல்லாம் கூட்டமாக மண்டபத்தில் கலந்து கொண்டதை படம் பிடித்துவிட்டு இறுதியில் 2011ஆம் அண்டில் அரச ஊழியர்களாக நியமனம் பெற்றவர்கள் உட்பட பிந்திய காலத்தில் நியமனம் பெற்ற 40 பேர் மட்டுமே இணைத்துக்கொள்ளப்படுவர் அறிவித்தனர். இதனால் பல நூற்றுக்ககணக்கானவர்கள் ஏமாற்றமடைந்து தமது ஆதங்கங்களை  வெளிப்படுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .