2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

யாழ். ஊடகவியலாளர்களுக்கு சிங்கள மொழி கற்கைநெறி

Suganthini Ratnam   / 2011 மே 29 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யுத்தத்திற்கு பின்னரும் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள்,  உடனடித் தேவைகள் இன்னமும் நிறைவேற்றப்படாது காணப்படுவதாக  தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எல்.விலேகொட தெரிவித்தார்.

யாழ். பாடி விருந்தினர் விடுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய மொழிகள் அமுலாக்கத்தில் பல நடவடிக்கைகளை எமது அமைச்சு எடுத்து வருகின்றன. தமிழ் பிரதேசங்களில் ஏற்படுகின்ற மொழிப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. சகல பிரதேசங்களிலும் சமூக மேம்பாட்டு அதிகாரிகளாக 200 பேரை நியமிக்கவுள்ளோம். சமூகத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை இனம் கண்டு அதனை எவ்வாறு தீர்க்கலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம் என்றார்.

இதன்போது வடக்குப் பிரதேசங்களிலுள்ள அரசாங்கத் திணைக்களங்களுக்கு நிர்வாக ரீதியாக சிங்கள மொழியில் மாத்திரம் கடிதங்கள் வருவது தொடர்பில்  ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், சிங்கள மொழியில் 90 வீதமான கடிதங்கள் தமிழ்ப் பிரதேசங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.  இதற்கு படிப்படியாக தீர்வு காணப்படுமெனவும் கூறினார்.

அரசாங்க திணைக்களங்களில் மொழி அமுலாக்கம் தொடர்பில்  ஆராய்ந்து தீர்வு காணப்படுமென்பதுடன், யாழ். மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு சிங்கள மொழியைக் கற்பதற்கான வகுப்புக்கள் ஒழுங்கு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சின் இணைப்பாளர் கலாநிதி மோகனும் கலந்துகொண்டார்.


  Comments - 0

  • Saleem Ramees Monday, 30 May 2011 07:48 PM

    வடக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் சிங்கள மொழி கற்கை நெறி அவசியமாகும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X