2025 மே 21, புதன்கிழமை

சாட்டிக்கடலில் குளிக்கச் சென்ற நபர் நீரில் மூழ்கி மரணம்

Suganthini Ratnam   / 2011 மே 30 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். வேலணை சாட்டிக்கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி மரணமாகியுள்ளார்.  

மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த குணரட்னம் செல்வராசா (வயது 40) என்பவரே இவ்வாறு மரணமானவர் ஆவார்.

மேற்படி நபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தனது நண்பர்களுடன் சென்று சாட்டிக்கடலில் குளித்துக்கொண்டிருந்த வேளையில் நீரில் மூழ்கி மரணமான சம்பவம் இடம்பெற்றது.   

இது தொடர்பில்      ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு  இவரது நண்பர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையில், இவரது மரணம் குறித்து உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டதைத் தொடர்ந்து நண்பர்கள் மூவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .