Suganthini Ratnam / 2011 மே 30 , மு.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
கீரிமலை வலித்தூண்டல் பகுதியில் இன்று முதல் கடற்றொழிலிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அப்பகுதி கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேற்படி பகுதியில் தம்மை மீன்பிடிப்பதற்கு அனுமதிக்குமாறு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இம்மக்களின் வாழ்வாதரத் தொழில் பாதிக்கப்படுவது தொடர்பிலும் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியை நேரில் சென்று சந்தித்து ஈ.சரவணபவன் விளக்கியிருந்தார்.
பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடி இதற்கு தீர்வைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்த கட்டளைத் தளபதி, இன்று முதல் கீரிமலை வலித்தூண்டல் பகுதியில் தடைகள் அற்ற மீன்பிடியில் ஈடுபடலாமெனத் தெரிவித்துள்ளார்.
14 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago