Kogilavani / 2011 மே 31 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி,கிரிசன்)
உண்மைக்கு உயிர்கொடுக்க கூடிய ஊடகவியலாளர்கள் இன்னமும் யாழ். மண்ணில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என யாழ்.பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்னம் தெரிவித்துள்ளார்
யாழ்.பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் கற்கைநெறி மாணவர்களினால் ' பத்திரிகை பதிவொளி' ஆவணப்படமும் 'பல்கலையான்' பத்திரிகை இதழ் வெளியீட்டு நிகழ்வும் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'ஊடகவியலாளரும் மருத்துவரும் ஒரே மாதிரியான செயற்பாட்டையே செய்கின்றார்கள். மருத்துவர் உயிர்களைக் காப்பாற்றுகிறார். ஊடகவியலாளர் தான் சார்ந்த சமூகத்தை காப்பாற்றுகிறார்.
தற்கால ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் நம்பகத்தன்மையற்ற செய்திகளையுமே வெளியிடுகின்றன. இந்த நிலை மாற வேண்டும். உண்மையை உண்மை என உரத்துக்கூற வேண்டும். சமூகத்தை சரியான வழியில் வழிநடத்த ஊடகவியலாளர்கள் சரியான முறையில் செயற்பட வேண்டும்' என கூறினார்.
இந் நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசியர் நா.ஞானக்குமரன், பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை, விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
13 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago