2025 மே 21, புதன்கிழமை

கிணற்றில் தவறி வீழ்ந்து பெண் மரணம்

Kogilavani   / 2011 மே 31 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழ். வலி வடக்கு மாவிட்டபுரம் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவமானது இன்று செவ்வாய்கிழமை காலை இடம் பெற்றுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

புதிதாக மீள்குடியேற்றம் இடம்பெற்ற இப்பகுதியில் காடு மண்டிக்கிடந்த தனது வீட்டு வளவை துப்புரவு செய்த போது இப் பெண் தவறி பாலடைந்த கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளார். ஐந்து பிள்ளைகளின் தாயான சந்திரமோகன் கிருஷந்தி (வயது 45) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மரண விசாரணை நாளை இடம் பெறவுள்ளதாகவும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .