Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Super User / 2011 மே 31 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊடகவியலாளர் மீதான தாக்குதல்களின் பின்னணியில் செயற்படும் மர்ம நபர்களை பாதுகாப்பு தரப்பினரால் ஏன் கண்டு பிடிக்க முடியவில்லை என்று இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் ஆர். பாரதி விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் அலுவலக செய்தியாளர் பெ.கவிகரன் தாக்கப்பட்டமை ஊடக சுதந்திரம், ஊடக ஜனநாயகம் இன்னமும் உரிய முறையில் பேணப்படவில்லை என்பதை எடுத்து காட்டுகின்றது. ஊடகவியலாளர்கள் மீதான தாக்குல் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதையிட்டு இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கவலையடைந்துள்ளது.
இது தொடர்பாக பல தடவை ஊடகத்துறை அமைச்சர் மற்றும் ஊடகத்துறை சார்ந்த அரச அதிகாரிகள் பலருக்கும் எடுத்துக்கூறியும் தாக்குதல்களை நிறுத்த நவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
24.05.2011 ஆம் திகதி செய்தியாளர் கவிகரன் அலுவலகத்தக்கு வந்து கொண்டிருந்தபோது யாழ் இந்துக்கல்லூரிக்கு அருகில் வைத்து இனம்தெரியாத நபர்கள்; தடிகள் பொல்லுகளினால் கடுமையாக தாக்கியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முறைகேடான நடவடிக்கைகள் மற்றும் அரசியல் அபிலாஷைகள் குறித்த விடயங்களை எழுதக்கூடாது என்பதும் அரச நலன்களுக்கு ஏற்ப செயற்பட வேண்டும் என்ற நோக்கிலும் கவிகரன் மீதான தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்பதை ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணம்; அபிவிருத்தியடைந்து வருகின்றதுஇ பயங்கரவாதம் அழிக்கப்பட்டு அங்கு ஜனநாயகம் ஏற்பட்டு விட்டது என்று அமைச்சர்கள் தினமும் மார் தட்டுகின்றனர். இந்த நிலையில் ஊடகவியலாளர் மீதான தாக்குதல்களின் பின்னணியில் செயற்படும் மர்ம நபர்களை பாதுகாப்பு தரப்பினரால் ஏன் கண்டு பிடிக்க முடியவில்லை என்று ஒன்றியம் கேள்வி எழுப்புகின்றது.
இதுவரை இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக எவரும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்படவில்லை. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களிடமும் உரிய முறையில் விசாரணைகள் நடத்தப்படவுமில்லை. எனவே ஊடகசுதந்திரம் ஊடக ஜனநாயகம் இருப்பதாக கூறிக்கொள்ளும் ஊடகத்துறை அமைச்சர் இந்த விடயம் தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றியம் கோரிக்கை விடுக்கின்றது.
ஊடகவியலாளர் ஒன்றியங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோரின் சந்தேகங்களை போக்கும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் எதிர்பார்க்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago