Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
A.P.Mathan / 2011 மே 31 , பி.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். நாவாந்துறை கொட்டடிப் பகுதியில் உள்ள வீட்டின் கூரையை உடைத்து, கொள்ளையர் குழு கூரிய ஆயுத முனையில் வீட்டு உரிமையாளரை அச்சுறுத்தி தாக்குதல் மேற்கொண்டு 10 பவுண் தங்க ஆபரணங்களையும் வீட்டில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டியையும் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் கொள்ளையடித்து தலைமறைவாகியுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸார் அப்பகுதிக்கு விரைந்துள்ளதாகவும் கொள்ளையர் குழுவின் தாக்குதலில் படுகாயமடைந்தவரான சின்னத்தம்பி ரவி (வயது 36) என்பவர் தற்போது யாழ். போதன வைத்திய சாலையில் 24ஆம் வாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி சம்பவம் தொடர்பாக குடும்ப உறவினர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கொள்ளையிட்ட கொள்ளையர் குழுவை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago