2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

யாழ்.மிருசுவில் வாகன விபத்தில் இளம் குடும்பப் பெண் பலி

Kogilavani   / 2011 ஜூன் 11 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி,தாஸ்)
யாழ். மிருசுவில் சந்திக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

மிருசுவில் வடக்கைச் சேர்ந்த யசோதரன் கெங்காதேவி (வயது 25) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் ஏ9 பிரதான வீதியில்  சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்த வேலை எதிரே மணலேற்றி வந்த டிபர் ரக வாகனத்தை முந்திச் செல்ல முற்படுகையிலே மேற்படி விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தற்போது, இவரது சடலம் சாவகச்சேரி  வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகன  சாரதியை கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X