2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

மர்ம மனிதர்கள் நடமாட்டம் காரணமாக மக்கள் மத்தியில் பீதி

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 31 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

மர்ம மனிதர்களின் நடமாட்டம் காரணமாக யாழ். மாவட்டத்திலுள்ள அனைவர்களும் பீதியடைந்து காணப்படுவதுடன், பொழுதுபட்டதும் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கும் நிலைமையும் காணப்படுகின்றது.

இந்த நிலையில்   மர்ம மனிதன் நடமாட்டத்தினால்  யாழ். மாவட்டத்தில் செயல்பாடுகள் அனைத்தும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.  மலை நாட்டில் ஆரம்பித்து மட்டக்களப்பு வரை சென்று யாழ். நாவாந்துறைப்  பகுதியில் நிலைகொண்ட மர்ம மனிதர்களின் நடமாட்டம் தற்போது வலிகாமத்தை நோக்கி  நகரத் தொடங்கியுள்ளது. எனவே, பொதுமக்களிடத்தில் தற்போது எற்பட்டுள்ள பீதியை போக்க பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டுமென வலிமேற்கு சங்கானைப் பிரதேசசபையினால் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வலிமேற்குப் பிரதேசசபை நேற்று செவ்வாய்க்கிழமை சபையின் தவிசாளர் நாகரஞ்சனி ஜங்கரன் தலைமையில் சபை கேட்போர்கூடத்தில் கூடியது. இந்த நிலையில் சபை அங்கதவர் யாழ். மக்களின் தற்போதைய நிலைமை சம்பந்தமாக ஒரு பிரேரணையை சபைக்கு கொண்டுவந்து உரையாற்றினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X