2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

யாழ். வர்த்தக நிலையங்களில் திருடர்கள் கைவரிசை; பெருந்தொகை பணம் கொள்ளை

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 20 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

யாழ் நகரப் பகுதியில் அமைந்துள்ள சுமார் 10 வர்த்தக நிலையங்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உடைக்கப்பட்டு பல இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வழமையாக தமது வர்த்தக நிலையங்களை பூட்டிவிட்டு மறுநாள் திங்கட்கிழமை திறக்க வந்தபோது வர்த்தக நிலையங்களின் பிரதான வாசற் கதவுகளில் பொருத்தப்பட்ட பூட்டுக்கள் அனைத்தும் உடைக்கப்பட்டு அங்கிருந்த நாணயத் தாள்கள் மற்றும் காசோலைகள் ஆகியன கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் வர்த்தக நிலையங்களுக்குச் சென்று கைரேகை அடையாளங்களைப் பதிவு செய்துள்ளனர்.
யாழ் நகர ஸ்ரான்லி வீதி, மணிக்கூட்டு வீதி போன்ற பகுதிகளிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

மோட்டார் வாகனங்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையம், மருந்தகம், ஹாட்வெயார், புடைவை மற்றும் அழகு சாதன விற்பனை நிலையங்களே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .