2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

'பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளது எனக் கூறி ஒரு சமூகத்தின் மீது பழியைச் சுமத்தக் கூடாது

Kogilavani   / 2011 டிசெம்பர் 01 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழில். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளது என்று எழுந்தமான முடிவுக்கு வரமுயாது எனவும் பெண்கள் மீதான வன்முறைகள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளது எனக் கூறி ஒரு சமூகத்தின் மீது குற்றச்சாட்டை, பழியைச் சுமத்தக் கூடாது எனவும் யாழ்.மாவட்ட பெண்கள் அபிவிருத்தி அமைப்பின் தலைவி திருமதி சரோஜினி சிவச்சந்திரன் தெரிவித்துள்ளார்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கும் தேசிய தின வைபவம் இன்று வியாழக்கிழமை யாழ். கிறின்கிளாஸ் விடுதியில் நடைபெற்றது. இதில் கருத்துரையாற்றும் போதே அவர்; இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழில். பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளமை தொடர்பாக தரவுகள், புள்ளிவிபரங்களினுடாகவும் ஆய்வினுடாகவும்தான் நிருப்பிக்க முடியுமே தவிர எழுந்தமானமாக எந்த முடிவுக்கும் வரமுடியாது.

போரின்; பின்பு வருகின்ற நிலமைகள,; சமூகவிழுமியங்கள் பாதிக்கப்படுகின்ற போது சில சில சம்பவங்கள் சமூகத்தில் இடம்பெறும். அது பொதுவாக போரினால் பாதிக்கப்பட்ட சகலரையுமே பாதிக்குமே தவிர ஒரு சமூகத்தைப் பாதிக்கிறது என கூறமுடியாது.

பெண்கள் மீது ஏற்படுத்துகின்ற வன்முறைக்கு அரசு பொறுப்பு கூறவேண்டும். அதனைக் கட்டுப்படுத்துவதும் அவர்களது கடமை. ஒரு சமூகத்தில் பெண்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்குமிடத்தில் அதற்கு பரிகாரம் செய்ய வேண்டியது அரசினுடைய தனித்துவமான உரிமையும் கூட.

போர்க்காலங்களிலும் போர்களத்திலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெற்றது. அதற்கு கூட அரசு இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு இது வரை நடவடிக்கைகளை அரசு எடுக்காததன் விளைவுதான் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்தமைக்கு முக்கிய காரணம்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு சட்ட நடவடிக்கைகளில் போது அரசு மென்போக்கைக் கடைப்பிடிக்கின்றது. சட்டங்கள் சரியான முறையில் அமுல்படத்த வேண்டும், தண்டனைகள் நடைமுறை படுத்தப்படவேண்டும்.

குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி தப்பித்துக் கொள்வதால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X