2025 மே 17, சனிக்கிழமை

தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகள் பறிமுதல்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 15 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மண்டைதீவுப் பகுதியில் தடைசெய்யப்பட்ட தங்கூசி வலையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களின்  5 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கூசி வலைகள் இன்று வியாழக்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய நீரியல்வளத்துறை திணைக்களப் பணிப்பாளர் எஸ்.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். மண்டைதீவுப் பகுதியிலுள்ள துறைமுகத்தில் மறைத்து வைக்கப்பட்ட தங்கூசி வலைகளே கைப்பற்றப்பட்டதுடன்,  இவற்றை அளிப்பதற்காக யாழ். பிராந்திய நீரியல் திணைக்களத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தடைசெய்யப்பட்ட தங்கூசி வலையை வைத்திருந்த கடற்றொழிலாளர்கள் எச்சரிக்கப்பட்டனர்.

இதேவேளை, யாழ். வர்த்தக நிலையங்களில் தடைசெய்யப்பட்ட கடற்றொழில் உபகரணங்களான தங்கூசி வலைகளை காட்சிப்படுத்துதல் மற்றும் அவற்றை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எஸ்.ரவீந்திரன் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .