2025 மே 17, சனிக்கிழமை

வங்கியிலிருந்து எடுத்துவந்த பணம் கொள்ளை

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 22 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

வங்கியிலிருந்து பணம் எடுத்துக்கொண்டு வந்த பெண்ணை தொடர்ந்து சென்ற இளைஞரொருவர், அப்பெண்ணிடமிருந்த ஒரு இலட்சம் ரூபாவை  பறித்துக்கொண்டு சென்ற சம்பவம் மல்லாகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.

மல்லாகம் சந்தியிலுள்ள வங்கியிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு சென்ற இப்பெண்ணை குறித்த இளைஞர் சைக்கிளில் தொடர்ந்து சென்றிருந்தார். இந்த நிலையில் அப்பெண் ரயில் கடவையை கடக்க முற்பட்டபோது  அவரிடமிருந்த கைப்பையை பறித்துக்கொண்டு அவ் இளைஞர் தப்பிச்சென்றுள்ளார்.

இது தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் அப்பெண் முறைப்பாடு செய்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .