2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

'யாழில் வாழ்பவர்களுக்கு தொல்லியல் வரலாற்றுக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது'

Kogilavani   / 2011 டிசெம்பர் 26 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழின் தொல்லியல் வரலாற்றுக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை யாழில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு இருக்கிறது. யாழ்ப்பணத்தில் என்ன நடந்தாலும் அதை விமர்சிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் ' காய்க்கிற மரத்தில் தான் கல்லெறி விழும்' விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு நாங்கள் எங்கள் குறைகளைத் தெரிந்து கொள்வது நல்லதென யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரெட்ணம் தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக கைலாசபதியரங்கில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சியில் பங்களிப்புச் செய்த வரலாற்றுத்துறை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

இங்கு  தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

வெளிநாடுகளில் வாழும் எங்களின் உறவுகள் யாழ்ப்பணத்தில் இருக்கும் போது யாழ்ப்பாணத்தின் அருமைபெருமை தெரியாதவர்களாக இருந்தார்கள். இப்போது இவ்வாறு இல்லை. உடனுக்குடன் யாழில் என்ன நடக்கிறது என்பதை அவதானித்து வருகிறார்கள். ஆனால் அவர்களின் பிள்ளைகள் யாழில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் வாழ்ந்து வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தின் வரலாற்றுகளை கண்முன்னே காட்டி நிற்பவையாக யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சி அமைந்தது. இதற்கு யாழில் இருப்பவர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் புஸ்பரெட்ணம், யாழ்.பல்கலைக்ககை கலைப்பீடாதிபதி ஞானக்குமரன், பேராசிரியர் சிவசாமி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X