2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

காணாமல்போனவர்களின் விபரங்களைப் பதிவு செய்யுமாறு த.தே.கூ. வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 01 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் கடந்த காலங்களில் கைதுசெய்யப்பட்டுள்ளோரினதும்  காணாமல் போனவர்களினதும் பெயர் விபரங்களை பதிவு செய்துகொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொக்குவிலிலுள்ள தனது இல்லத்தில் இதற்கான பதிவினை மேற்கொள்ளுமாறு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்

யாழ். குடாநாட்டில்  காணாமல் போனவர்கள் மற்றும் கைதுசெய்யப்பட்டவர்களின் விபரங்கள்  சேகரிக்கப்படவுள்ளன. இதன் மூலம் அவர்கள்  சிறைச்சாலைகளில்  இருக்கிறார்களா? அல்லது வேறிடங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனரா?  என்பதை அறியவுள்ளதுடன்,  காணாமல் போனவர்களின் விபரங்களை இந்த ஆண்டில் வெளிக்கொண்டுவரவுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X