Super User / 2012 ஜனவரி 03 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்த்)
யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி கடற்பரப்புக்குள் பிரவேசிக்கும் றோலர்களினால், தாம் தொழில் ரீதியாக பெரும் பாதிப்பையும் நட்டத்தையும் அடைவதாக பூநகரி பிரதேச கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வெள்ளி, சனி, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தங்களுடைய கடற் பகுதிக்குள் வருகின்ற இந்த றோலர்களால் குறித்த நாட்களில் தாம் அச்சத்தில் கடலுக்கு செல்வதில்லை எனவும் தெரிவித்தனர்.
இவ்வாறு றோலர்களினால் பெறுமதி வாய்ந்த வளைகள் அறுக்கப்படுவதாகவும் சிலவேளைகளில் காணாமல் போவதாகவும் பூநகரி கடற்றொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
மீள்குடியேற்றத்திற்கு பின்பு தாம் வங்கிகள் மற்றும் தனியார் என பல தரப்பினர்களிடம் கடன்களை பெற்று தொழில் உபகரணங்களை பெற்று தொழிலை மேற்கொண்டு வருகின்ற நிலையில் யாழ்ப்பாண றோலர்களின் வருகை, தங்களுடைய தொழிலுக்கு பெரும் பாதிப்பாக அமைவதாகவும் கவலை தெரிவித்துள்ளனா.
2 hours ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
17 Dec 2025
17 Dec 2025