2025 மே 17, சனிக்கிழமை

வலி. வடக்கில் மீளக்குடியேறிய பகுதிகளில் டெங்குநோயின் தாக்கம் அதிகரிப்பு

Kogilavani   / 2012 ஜனவரி 08 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்.தெல்லிப்பழைப் பிரதேச செயலர் பிரிவில் டெங்குநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதால் புகையூட்டல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஏழாலை, அளவெட்டி, பிரதேசங்களில் இந்நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

அத்துடன் அப்பிரதேசத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் தலைவர்களை டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடுமாறு வலியுறுத்தி சுகாதார வைத்திய அதிகாரியினால் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

பிரதி வெள்ளிக்கிழமை தோறும் இப்பிரதேசங்களுக்கு உட்பட்ட திணைக்களங்களில் காலை 9 மணி முதல் 10 மணிவரை சிரமதானப்பணியில் ஈடுபடுமாறு திணைக்களத் தலைவர்கள் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் வலி. தெற்குப் பிரதேசத்தில் சுன்னாகப் பொலிஸார் மேற்கொண்ட திடீர் நடவடிக்கை மூலம் 5 பேருக்கு டெங்கு பரவக்கூடிய சூழலை வைத்திருந்ததற்காக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை வைத்திய அதிகாரி பிரிவிலும் கொழும்பில் இருந்து வருகை தந்த இருவர் டெங்குநோயின் தாக்கத்திற்கு உட்பட்டிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .