Menaka Mookandi / 2012 ஜனவரி 18 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)
யாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவர்கள், ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர்கள், மருந்தாளர்கள் மற்றும் தொழிநுட்ப சிகிச்சை உதவியாளர்கள் இன்று புதன்கிழமை காலை முதல் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் குதித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய சேவைகளைத் தவிர ஏனைய சேவைகள் நடைபெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சுகயீனப் போராட்டத்தின் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையின் நோயாளர்களுக்கு மருந்து வழங்கும் நிலையம் மூடப்பட்டு உள்ளது.
அத்தோடு எக்ஸ் - ரே பிரிவும் இன்று இயங்கவில்லை இதனால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago