2025 மே 17, சனிக்கிழமை

நிர்வாக அலுவலர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 18 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ்ப்பாணம், தீவகத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் நிர்வாக அலுவலர் பதவிகள் வெற்றிடமாக இருப்பதைத் தொடர்ந்து அப்பதவிகளுக்கு உரியவர்களை நியமனம் செய்ய யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

யாழ். மாவட்ட பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் தரம் ஒன்றைச் சேர்ந்த அலுவலர்களை பதில் நிர்வாக அலுவலர்களாக நியமனம் செய்வதற்கான நடவடிக்கை யாழ். மாவட்ட அரசாங்க அதிபரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் தரம் ஒன்று முகாமைத்துவ உதவியாளர்களை பதில் நிர்வாக அலுவலர்களாக நியமனம் செய்யும் முகமாக உரியவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தீவகத்தில் உள்ள வேலனை, காரைநகர் பிரதேச செயலகங்கள்,  ஊர்காவற்றுறை, நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் உள்ள நிர்வாக அலுவலர்கள் வெற்றிடங்களாக உள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .