2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

'இனங்களுக்கிடையே இணக்கப்பட்டை ஏற்படுத்த அதிகார பங்கீடு அவசியம்'

Menaka Mookandi   / 2012 ஜனவரி 18 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

'இனங்களுக்கிடையில் நீடித்ததும், கண்ணியமானதுமான இணக்கப்பட்டை ஏற்படுத்துவதற்கு அர்த்தமுள்ள அதிகாரப் பங்கீடு மிக அவசியம்' என யாழ். மண்ணில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா தெரிவித்தார்.

யாழில் நிர்மாணிக்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் 47 வீடுகள் இன்று புதன்கிழமை மாலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரினால் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, யாழ்.நூலக முன்றலில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது இந்திய அரசினால் பொதுமக்களுக்கு 10 ஆயிரம் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
 
இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து உரையாற்றும் போதே எஸ்.எம்.கிருஷ்ணா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'அதிகாரப் பங்கீடானது மீள் இணக்க அரசியலில் 13ஆவது அரசியல் திட்டத்தை அமுல்படுத்துவதன் ஊடாக சாத்தியமான தீர்வு ஒன்றை தமிழ் மக்களுக்கு கொடுக்க முடியும். இதுவே இந்தியாவின் கருத்தாக இருக்கிறது.

இனங்களுக்கிடையில் உண்மையான அமைதி ஏற்படுவதற்கு இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் அபிவிருத்திப் பணிகளை செய்து கொடுக்கும். இந்திய அரசு இந்தப் பகுதி மக்களின் துன்பங்களை மிகவும் உணர்ந்து செயற்படுகிறது.

இந்த மக்களுக்கான அபிவிருத்திப் பணியில் மிகக்கூடிய கவனம் செலுத்தியுள்ளது. காங்கேசன்துறை துறைமுகப் பணிக்காக 19 மில்லியன் அமெரிக்க டெலர்களைச் செலவழித்துள்ளோம். அப்பணி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

இந்திய வீட்டுத்திட்டத்திற்காக இந்திய அரசு 270 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவழித்து போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்கின்றோம்.

பலாலி விமான ஓடுபாதையையும், யாழ் - வவுனியா புகையிரத பாதை புனரமைப்பு பணிகளையும் செய்து வருகின்றோம். இந்த மக்களின் அபிவிருத்தியில் என்றும் இந்தியா தனது பங்களிப்பை செய்துவரும்' என்றார்.


  Comments - 0

  • pottuvilan Thursday, 19 January 2012 02:22 AM

    இவை எல்லாமா எங்களுக்கு வேணும், எங்களுக்கு எது தேவை என்பதை கூடவா நீங்கள் அறிய வில்லை?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X