2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

வன்னித் தொண்டர் ஆசிரியர்களுடன் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 24 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வன்னித்தொண்டர் ஆசிரியர்களின் நியமனம் தொடர்பில்  பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று செவ்வாய்க்கிழமை விசேட சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் வன்னித் தொண்டர் ஆசிரியர்களின் நியமனத்தில் அரசாங்கத்தின் பக்கம் வெற்றி கிடைத்தால் மட்டுமே நாங்களும் மக்களுக்குத் தேவையானவற்றைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் சரியான முறையில் நீங்கள் பங்களித்திருந்தால் உங்களது வேலைவாய்ப்பு எப்போதோ கிடைத்திருக்கும் எனவும் அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

இந்த தொண்டர் ஆசிரியர்களுடனான சந்திப்பில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் தொண்டர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0

  • kundaanthady Wednesday, 25 January 2012 01:52 AM

    தோழரே .... யாருக்கு வாக்களிப்பது என்பதை தீர்மானிப்பது தான் ஜனநாயகம் .... மக்கள் யாருக்கு வாக்களித்தால் என்ன? அது அவர்களின் விருப்பம் ...... அவர்கள் அரசாங்கம் நடத்திய தேர்தலில் தானே வாக்களித்தனர் .... அதிலென்ன பிரச்சனை உங்களுக்கு? ..... அது புலியின் தேர்தல் இல்லையே .... உங்களால் முடிந்ததை மக்களுக்கு செய்யலாம் தானே .... பெரும்பான்மை மக்கள் இந்த அரசுக்கு வாக்களித்து எதை அடைந்தார்கள் ?...நீங்கள் வீணையை கோட்டை விட்டு எதை அடைந்தீர்கள் ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X