2025 மே 17, சனிக்கிழமை

யாழ். குடாநாட்டுக்கான நேரடி மின்விநியோகம் நாளை ஆரம்பம்

Kogilavani   / 2012 பெப்ரவரி 04 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

 

யாழ்ப்பாணத்திற்கான நேரடி மின்விநியோகம் நாளை உத்தியோக புர்வமாக ஆரம்பித்து வைப்பப்படவுள்ளது.

இந்த நேரடி மின்விநியோகத்தை கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ள மின்சக்தி மின்வலு அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

தென்னிலங்கையிலிருந்து வரும் நீர் மின்வலு வழங்கலின் மூலமான 33,000 உயர் மின்அழுத்த இணைப்பு வடமாகாணத்துக்கு 25 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் தடவையாக வழங்கப்படவுள்ளது. இதன்மூலம் வடமாகாணத்துக்கான மின்னிணைப்பானது தேசிய மின்வழங்கள் கட்டமைப்புடன் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது யாழ். குடாநாட்டுக்கான மின்சாரம் மின்பிறப்பாக்கிகளின் மூலமே வழங்கப்பட்டுவருகிறது. இந்தப் புதிய இணைப்பின் மூலம் யாழ்ப்பாணத்தின் சீரற்ற நிலையில் இருக்கும் மின்சார விநியோகம் ஒழுங்குபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரந்தனில் இந்த இணைப்பு உள்ளதனால், இந்த விநியோக இணைப்பு நிகழ்வு அங்கு நடைபெறவுள்ளதென கிளிநொச்சி மாவட்ட மின்சார சபையினர் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0

  • avathaani Saturday, 04 February 2012 11:34 PM

    25 வருட இடைவெளிக்கு பின்னரான யாழ்ப்பாண மின் விநியோக நிகழ்வினை, 64 வருட சுதந்திர நிகழ்வுடன் இணைத்திருக்கலாம். மின்சாரம் சீராக்கபடுவது போல, அதிகாரம் வழங்கலிலும் சீராக்கம் துரிதமாக நிகழவேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .