2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

யாழில் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்சின் பயணச்சீட்டு விற்பனைக் காரியாலயம்

Suganthini Ratnam   / 2012 மே 04 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

ஸ்ரீலங்கன் ஏயார்லைன்சின் பயணச்சீட்டு விற்பனைக் காரியாலயம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் இன்று வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

வடபகுதி மக்களின் பயணத்துடன் தொடர்புடைய அனைத்து சேவைகளையும் வழங்கும் முகமாக அமைக்கப்பட்டுள்ள இக்காரியாலயத்தை  பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் யாழ். மாநகர சபை மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, ஸ்ரீலங்கன் ஏயர்லைன்சின் சந்தைப்படுத்தல் அதிகாரிகள்,  வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .