2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

அமைச்சர் டக்ளஸின் தலையீட்டால் யாழ். வேம்படி கல்லூரி அதிபரின் இடமாற்றம் இடைநிறுத்தம்

Super User   / 2012 ஜூன் 13 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.டானியல்)

யாழ். வேம்படி மகளிர் கல்லூரி அதிபரின் இடமாற்றத்தை இரத்து செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டமையை அடுத்து இன்று புதன்கிழமை நடைபெறவிருந்த மாணவர்களின் ஆர்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது

வேம்படி மகளிர் கல்லூரி அதிபரின் இடமாற்றத்தை இரத்து செய்யக் கோரி இன்று புதன்கிழமை மாணவர்கள் பாடசாலை மைதானத்தில் ஆர்பாட்டத்திற்கு தயாராகினர்.

யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா சம்பவ இடத்திற்கு வந்து அமைச்சர்; டக்ளஸ்  தெலைபேசி ஊடாக பாடசாலை ஒலிவாங்கியில் மாவர்களுடன் பேசினார்.

'தான் கொழும்பில் இருப்பதாகவும் தங்கள் பாடசாலை அதிபரின் இடமாற்றத்தை கல்வி அமைச்சுடன் கதைத்துள்ளேன் ஒரு கிழமைக்குள் இடமாற்றம் இடைநிறுத்தப்படும் என்ற உறுதிமொழியை மானவர்களுக்கு கொழும்பில் இருந்தவாறு அமைச்சர் தொலைபே ஊடாக இதன்போது தெரிவித்தார்.

இதனையடுத்து வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகள் ஆர்பாட்டத்தை  கைவிட்டு கல்வி நடவடிக்கைகளுக்கு திரும்பினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X